கொரோனா வைரஸ் பாதிப்பு - கல்லூரி மூடப்பட்டது
மொத்த வளாகமும் கிருமி நீக்குதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கனடாவின் நார்த் யார்க் பகுதியில் அமைந்துள்ள தமது தனியார் கல்லூரியை மூடுவதாக தொடர்புடைய கல்லூரி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
அந்த கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரின் கணவருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
குறித்த தனியார் கல்லூரியானது புதனன்று வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், தாங்களாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும், பாதுகாப்பு முக்கியம் என்பதால், மொத்த வளாகமும் கிருமி நீக்குதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
இருப்பினும், பாதிக்கப்பட்ட மாணவர் கடைசியாக வளாகத்தில் கலந்து கொண்டது எப்போது என கல்லூரி தகவலை வெளியிட மறுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாகவும், அவரது மனைவியும் மாணவியுமானவர் தற்போது கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.