"இது எமது சொந்த நாடு. இது பௌத்த சிங்கள நாடு. இந்த நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் பௌத்த தர்மத்துக்கு இணங்க ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றனர்."
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், மேலும் கூறியதாவது,
பௌத்த மதத்தைப் பாதுகாப்பதுடன், ஏனைய இன மற்றும் மதத்தவர்களையும் பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கி செல்வதே எமது நோக்கமாகும்.
எனவே, எம்மிடம் ஆட்சி அதிகாரத்தைத் தருமாறு அனைத்து இன மக்களிடமும் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்" - என்றார்.