மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்றையதினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது சிறிலங்காவின் பிரதமர் இதனை தெரிவித்தார்.
"19 வது திருத்தத்தால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அது பல பிரச்சினைகளை தீர்க்கும்" என்றும் பிரதமர் கூறினார்.
"பொதுத் தேர்தலுக்குப் பின்னர், மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும்" என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.