Home » உலகச் செய்திகள் » சிறிலங்காவைத் தனிமைப்படுத்த முடியாது - பிரதமர் மஹிந்த

சிறிலங்காவைத் தனிமைப்படுத்த முடியாது - பிரதமர் மஹிந்த

சிறிலங்காவுக்கு எதிராக எவ்வித போர் குற்றங்களையும் சுமத்த முடியாது.

👤 Sivasankaran8 March 2020 8:19 AM GMT
சிறிலங்காவைத் தனிமைப்படுத்த முடியாது - பிரதமர் மஹிந்த
Share Post

"சிறிலங்காவுக்கு எதிராகத் தடைகளை விதிக்கவோ, சிறிலங்காவை பன்னாட்டு ரீதியில் தனிமைப்படுத்தவோ எந்த நாடும் நடவடிக்கை எடுக்காது" என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பன்னாட்டு ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதில் உண்மையில்லை.

நாட்டுக்காகவே ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியதில் இருந்து சிறிலங்கா விலகியது.

இணை அனுசரணை வழங்கியதில் இருந்து விலகியது சம்பந்தமாக சிறிலங்காவுக்கு வேறு எந்த நாடும் எவ்வித அழுத்தங்களை கொடுக்க முடியாது.

ஒரு நாட்டின் மீது பொருளாதார தடையை மனித உரிமைப் பேரவையால் விதிக்க முடியாது. அதனை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையால் மாத்திரமே செய்ய முடியும். சிறிலங்கா இராணுவம் எந்த போர் குற்றங்களையும் செய்யவில்லை. இதனால், சிறிலங்காவுக்கு எதிராக எவ்வித போர் குற்றங்களையும் சுமத்த முடியாது.

விடுதலைப்புலிகளிடம் இருந்து சாதாரண தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏதேனும் குற்றச்சாட்டு சுமத்தப்படுமானால், நாட்டில் உள்ள சட்டத்தின்படி செயல்படப் பொறிமுறை செயற்படுத்தப்பட்டது.

எனது அரசாங்கத்தின் காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு மூலம் விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக வெளிவிவகார அமைச்சர் , ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.