Home » உலகச் செய்திகள் » கொரோனா வைரஸ் பரவல் - இனிமேல் தமிழிலும் அறிவிப்பு வெளியாகும்

கொரோனா வைரஸ் பரவல் - இனிமேல் தமிழிலும் அறிவிப்பு வெளியாகும்

மொழிப்பெயர்ப்பு தாமதம் காரணமாக தமிழில் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் அவர் என்று தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran14 March 2020 2:52 PM GMT
கொரோனா வைரஸ் பரவல் - இனிமேல் தமிழிலும் அறிவிப்பு வெளியாகும்
Share Post

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் செய்தி அறிக்கைகள் மற்றும் ஏனைய தடுப்பு திட்டங்களை தமிழிலும் உடனடியாக மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக கடுவேவ தெரிவித்துள்ளார்.

கொரோனாவைர தொடர்பான போலியான தகவல்களை நம்பி பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அரசாங்கம் முன்னதாக அறிவித்தது. கொரோனா தொடர்பான அனைத்து தகவல்களையும் அரசாங்கம் உடனடியாக அறிக்கைகள் மூலமாக பொது மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஏற்கனவே பொதுமக்களுக்காக வெளியிடப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான அறிக்கைகள் மொழிப்பெயர்ப்பு தாமதம் காரணமாக தமிழில் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் அவர் என்று தெரிவித்துள்ளார்.

இனிவரும் நாட்களில் தமிழிலும் உடனடியாக அறிவிப்புக்கள் வெளியாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.