கிளிநொச்சியில் குண்டிவெடிப்பு - நாச வேலையா?
கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகின்ற ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
👤 Sivasankaran15 March 2020 12:20 PM GMT

கிளிநொச்சி, முரசு மோட்டை கோரக்கன்கட்டு குடியிருப்புப் பகுதியில் நேற்றிரவு ஒரு வீட்டில் ஒரு குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகின்ற ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் குறித்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை சிறிலங்கா இராணுவத்தினர், கிளிநொச்சிக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire