கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுத்தேர்தலை பின்தள்ளிவைக்குமாறு பல்வேறு தரப்பினரால் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில குறித்த வைரஸ் தொற்று காரணமாக மக்கள் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளமையால் தேர்தல் பின்தள்ளி வைக்கப்பட வேண்டும் என்று அபே ஜனபல பக்சயவின் தலைவர் அத்துரலியே ரதன தேரர் மற்றும் பொதுபலசேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.