Home » உலகச் செய்திகள் » மக்களுக்காக மக்களாகவே பிறப்பித்துக்கொள்ளும் ஊரடங்கு உத்தரவு - மோடி

மக்களுக்காக மக்களாகவே பிறப்பித்துக்கொள்ளும் ஊரடங்கு உத்தரவு - மோடி

22-ம் தேதி கொரோனா வைரஸ்க்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும்.

👤 Sivasankaran19 March 2020 4:30 PM GMT
மக்களுக்காக மக்களாகவே பிறப்பித்துக்கொள்ளும் ஊரடங்கு உத்தரவு - மோடி
Share Post

உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

கொரோனா வைரவை பொதுமக்கள் விழிப்புணர்வோடு எதிர்கொள்ள வேண்டும். பொதுமக்கள் முடிந்த வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் யரும் ஞாயிறன்று வெளியே வர வேண்டாம். 22-ம் தேதி கொரோனா வைரஸ்க்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும்.

மருத்துவர்கள், ஊடகத்தினர், போக்குவரத்து துறையினர் போன்றவர்களுக்கு மற்றவர்கள் தொந்தரவு தர வேண்டாம். 22ம் தேதி மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் நின்று அத்தியாவசியப் பணியில் ஈடுபடுவோருக்கு மற்றவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். மருத்துவர்களுக்கு கைத்தட்டல் மூலம் நன்றி சொல்லுங்கள். கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிரூபிப்போம்.

இது மக்களுக்காக மக்களாகவே பிறப்பித்துக்கொள்ளும் ஊரடங்கு உத்தரவு ஆகும். வேலையில்லாத நாள்களில் பணியாளர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்தை பிடிக்க வேண்டாம் என்று இந்திய பிரதமர் மோடி பேசியுள்ளார்.