கடற்படை முகாமிற்குள் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி
நேற்று இரவு இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

புத்தளம் கல்பிட்டியிலுள்ள கடற்படை முகாமில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகச்க் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொஹொத்துவாரம (Mohottuwarama) பகுதியிலுள்ள முகாமில் நேற்று இரவு இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டில் கடற்படைவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையை சேர்ந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் புத்தளம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்படவுள்ளனர்.
துப்பாக்கி சூடு மேற்கொண்ட படைவீரர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அவர் காட்டில் மறைந்திருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், இரவு முழுவதும் காவல்துறையினர் கடற்படைப்வீரரைத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியுள்ளது. பின்னர், துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.