Home » உலகச் செய்திகள் » கொரோனா வைரஸ் - இந்திய பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ

கொரோனா வைரஸ் - இந்திய பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ

வாசலில் அல்லது பால்கனியில் செல்போன் அல்லது அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றி ஒளிரவிட வேண்டும்.

👤 Sivasankaran3 April 2020 2:27 PM GMT
கொரோனா வைரஸ் - இந்திய பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ
Share Post

கொரோனா வைரசை கட்டுப்படுத்த தற்போது இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி ஒரு வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் எடுக்கும் இந்த முடிவை பலநாடுகள் பின்பற்றி வருகின்றன. அனைவருகொரோனா வைரஸ் - பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோம் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும்.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தை குறிக்கும் வகையில், வருகின்ற ஏப்ரல் மாதம் 5ம் திகதி இரவு 9 மணிக்கு மக்கள் அனைவரும் வீட்டில் உள்ள மின்விளக்குகளை 9 நிமிடங்கள் அனைத்து விட்டு வாசலில் அல்லது பால்கனியில் செல்போன் அல்லது அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றி ஒளிரவிட வேண்டும். விளக்கேற்றும் போது அவசியம் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டுமென்று பேசியுள்ளார்.