சிங்கப்பூரில் ஒரு மாதம் ஊரடங்கு உத்தரவு - பிரதமர்
1 மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் சீன் லூங் அறிவித்து உள்ளார்.
👤 Sivasankaran3 April 2020 2:54 PM GMT

உலகமெங்கும் பல நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. சிங்கப்பூரில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 1,049 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருகின்ற 7ம் திகதி முதல் அடுத்த 1 மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் சீன் லூங் அறிவித்து உள்ளார்.
புதிய சமூக இடைவெளி விதிகளை மீறுவோர்கள் மீது 6 மாத சிறை தண்டனையும் மற்றும் 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராத தொகையும் விதிக்கப்படும். அதனால் பொதுமக்கள் அரசின் விதிகளை அவசியம் பின்பற்ற வேண்டுமென்றும் அறிவுத்தப்பட்டுள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire