உதவி தேவைப்படும் சமூகங்களுக்கு கனேடிய அரசு மேலதிக ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் - பிரதமர்
கடினமான காலத்தைக் கனேடியர்கள் கடந்து செல்வதற்கு உதவியாகச் சம்பளத்தை இழந்தவர்களுக்கு உதவியாக கனடா...

கடினமான காலத்தைக் கனேடியர்கள் கடந்து செல்வதற்கு உதவியாகச் சம்பளத்தை இழந்தவர்களுக்கு உதவியாக கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு, வணிக நிறுவனங்களுக்குக் கடன்கள், சம்பள மானியம் ஆகிய மூன்று அம்ச பொருளாதார திட்டம் ஒன்றைக் கனேடிய அரசு தயாரித்துள்ளது.
மேலும் அதிக கனேடியர்கள் இந்த நடவடிக்கைகளால் பயன் பெறுவதை உறுதி செய்வதற்காக மாதமொன்றுக்கு 1,000 டொலர் வரை வருமானம் பெறும் பணியாளர்களுக்கும், பருவகால பணியாளர்களுக்கும் (seasonal workers), வேலைக்காப்புறுதிக் கொடுப்பனவுகள் அண்மையில் முடிவடைந்தோருக்கும் கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு கடந்த வாரம் விரிவாக்கப்பட்டது.
சக்தித் தொழிற்துறையில் உள்ளோருக்கும், கலை, கலாச்சாரம், விளையாட்டு ஆகிய பிரிவுகளில் பணிபுரிவோருக்கும் உதவியாகப் புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. சம்பள அதிகரிப்புத் தேவைப்படும் அத்தியாவசிய பணியாளர்களின் சம்பளங்களை அதிகரிக்கும் விடயத்தில் சமஷ்டி அரசு - மாகாண, பிராந்திய அரசுகளுடன் முன்னேற்றம் கண்டுவருகிறது.
கோவிட்-19 காரணமாக மேலதிக சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுவலுவுள்ளோருக்கும், மாற்றுவலு கொண்டவர்களைப் பராமரிப்போருக்கும் ஆதரவளிப்பதற்கான வழிகளை அரசு ஆராய்ந்து வருகிறதெனப் பிரதமர் கூறினார்.