கொரோனா வைரஸ் பரவலை கையாள அண்டை நாடுகளான சிறிலங்கா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பூடானுக்கு உதவ இந்திய ராணுவம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நிருபர்களிடம் பேசிய சிறிலங்கா பாதுகாப்பு துறை செயலாளர் கமல் குணரத்னே, "சிறிலங்காவில் கொரோனா வைரசை எதிர்த்து போராட இந்திய ராணுவத்திடம் உதவி எதுவும் கேட்கவில்லை என்றும், இது தொடர்பாக இரு தரப்பிலும் எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனவும் கூறினார்.
கொரோனா வைரசின் அனைத்து சவால்களையும் சமாளிக்க சிறிலங்கா ராணுவம் தயாராக இருக்கிறது என்றும் வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில், சிறிலங்கா வீரர்கள் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார். எனவே இந்தியா மட்டுமின்றி வேறு எந்த வெளிநாட்டு ராணுவமும் சிறிலங்காவுக்கு உதவ வேண்டிய அவசியம் இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.