Home » உலகச் செய்திகள் » வடகொரிய தலைவரின் உடல்நிலை நிலவரம் - சீனா டாக்டர்கள் குழுவை அனுப்புகிறது

வடகொரிய தலைவரின் உடல்நிலை நிலவரம் - சீனா டாக்டர்கள் குழுவை அனுப்புகிறது

ஏப்ரல் 12ஆம் திகதி இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக வதந்திகள் பரவியது.

👤 Sivasankaran25 April 2020 2:38 AM GMT
வடகொரிய தலைவரின் உடல்நிலை நிலவரம் - சீனா டாக்டர்கள் குழுவை அனுப்புகிறது
Share Post

அமெரிக்க ஆதாரங்களின் படி எந்த உறுதியான தகவலும் இல்லை என்றாலும், கிம் இறந்துவிட்டதாக ஹாங்காங் சேட்டிலைட் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இதை தொடர்ந்து வட கொரியாவின் தலைவரான கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ளா சீனா மருத்துவர்கள் குழுவை வட கொரியாவுக்கு அனுப்ப உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"வட கொரிய தலைவரின் உடல்நிலை தொடர்பான அறிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வ சேனல்களிலிருந்து உறுதிப்படுத்தப்படவில்லை" என்று பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

வட கொரிய நாட்டுத் தலைவர் ஏப்ரல் 12ஆம் திகதி இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக வதந்திகள் பரவியது.

உண்மை நிலவரம்தான் என்ன? உண்மை விரைவில் வெளிவரும்.