கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு மார்ச் 12ஆம் திகதி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நார்வே படிப்படியாக தளர்த்தி வருகின்றது.
இதில், கல்வி நடவடிக்கைகளை படிப்படியாக இயல்பாக்குவதற்கான ஒரு கட்டமாக நார்வே அரசு, பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, பாலர் பாடசாலைகளுக்கு ஒரு வாரத்திற்கு பிறகு, ஆறு முதல் 10 வயதுடைய மாணவர்கள் ஆறு வார தொலைநிலை கற்றலுக்குப் பிறகு தங்கள் பாடசாலைகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், தொற்று பரவலை தடுப்பதற்கான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக, வகுப்புகளில் அதிகபட்சமாக 15 மாணவர்களே உள்வாங்கப்படுகின்றனர்.
எனினும், தொற்று பரவும் அச்சத்தினால் மீண்டும் பாடாசலைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறித்து பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.