நியூஸிலாந்து சமூக பரவலை முற்றிலும் தடுப்பதில் வெற்றி கண்டுள்ளது - பிரதமர்
நியூஸிலாந்தில் சமூக பரவல் இல்லை. நாடு கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 5 வாரங்கள் கடுமையான 4 ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) நியூஸிலாந்து சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த தளர்வில் சில தொழில்கள் தொடர்ந்து நடக்கவும், பாடசாலைகளை திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொற்று பரவல் குறித்து நியூஸிலாந்து பிரதமர் கூறுகையில், 'கொரோனா பிடியில் இருந்து நியூஸிலாந்து மெல்ல மீண்டு வருகின்றது. அத்துடன் பரவலை முற்றிலும் தடுப்பதில் வெற்றி கண்டுள்ளது.
நாடு கொரோனா வைரஸ் தாக்குதலை முற்றிலுமாக முடிவு கொண்டு வர முழு முயற்சி மேற்கொண்டது. தற்போது நியூஸிலாந்தில் சமூக பரவல் இல்லை. நாடு கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளது.
பெரும்பாலான மக்கள் பூட்டப்பட்ட நிலையில் இருக்கவும் சமூக தொடர்புகளைத் தவிர்க்கவும். எல்லோரும் நாம் அனைவரும் தவறவிட்ட சமூக தொடர்பை மீண்டும் கொண்டுவர விரும்புகிறோம்
ஆனால் அதை நம்பிக்கையுடன் செய்ய நாம் மெதுவாக செல்ல வேண்டும். அதேபோல எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என்றும் நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.