Home » உலகச் செய்திகள் » இந்திய விண்வெளித் துறையிலும் தனியாருக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன்

இந்திய விண்வெளித் துறையிலும் தனியாருக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன்

இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்.

👤 Sivasankaran16 May 2020 2:41 PM GMT
இந்திய விண்வெளித் துறையிலும் தனியாருக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன்
Share Post

இந்திய விண்வெளித் துறையான இஸ்ரோவில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12ஆம் திகதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 இலட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு 'தன்னிறைவு இந்தியா' என்ற பெயரில் பல கட்டங்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தன்னிறைவு இந்தியா திட்டத்தின் நான்காம் கட்ட அறிவிப்புகளை இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட நிர்மலா சீதாராமன், அரசின் பல துறைகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

இதுகுறித்த அவரது அறிவிப்பில், "இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அத்துடன், செயற்கைக் கோள் தயாரிப்பு, செயற்கைக் கோள் ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.