Home » உலகச் செய்திகள் » பிரித்தானியாவிலிருந்து வரும் மக்களும் சுய தனிமைப்படுத்தப்படுவர் - பிரான்ஸ்

பிரித்தானியாவிலிருந்து வரும் மக்களும் சுய தனிமைப்படுத்தப்படுவர் - பிரான்ஸ்

எந்தவொரு ஐரோப்பிய நாட்டிற்கும் பரஸ்பர நடவடிக்கைகளை பிரான்ஸ் விதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran23 May 2020 3:13 PM GMT
பிரித்தானியாவிலிருந்து வரும் மக்களும் சுய தனிமைப்படுத்தப்படுவர் - பிரான்ஸ்
Share Post

பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸிற்கு வரும் மக்கள், எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி முதல் 14 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டுமென பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவுக்கு வருபவர்களுக்கான தனிமைப்படுத்தப்படுத்தல் திட்டங்களை உட்துறை செயலாளர் பிரிதி படேல் அறிவித்த அதே நாளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனிமைப்படுத்தலை அமுல்படுத்தும் எந்தவொரு ஐரோப்பிய நாட்டிற்கும் பரஸ்பர நடவடிக்கைகளை பிரான்ஸ் விதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அரசாங்கம் தனிமைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஒரு முழுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், 'இதுவொரு 'தனக்குத்தானே செய்கிற தனிமைப்படுத்தல்'. பிரித்தானியாவில் இருந்து வரும் மக்கள் 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தும்படி கேட்கப்படுகிறார்கள்.

ஆனால், இடத்தை அரசாங்கத்திற்கு அறிவிக்க தேவை இல்லை. தனிமைப்படுத்தத் தவறினால் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸின் உட்துறை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம், வருத்தப்படுகிறோம்' என கூறினார்.

முன்னதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆகியோரின் கூட்டு அறிக்கை, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையே பயணிக்கும் மக்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.