மெங் தீர்ப்பிற்குப் பின் சீனா-கனடா உறவில் அதிகரிக்கும் விரிசல்
சீன மக்கள் குடியரசின் கடுமையான கோரிக்கைகளுக்கு எதிரான ஒரு தீர்ப்பைப் பிரிட்டிஷ் கொலம்பியா நீதிபதி ...

சீன மக்கள் குடியரசின் கடுமையான கோரிக்கைகளுக்கு எதிரான ஒரு தீர்ப்பைப் பிரிட்டிஷ் கொலம்பியா நீதிபதி வெளியிட்ட பின்னர் கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கசப்பான அரசியல் பிளவு புதன்கிழமை அதிகரித்துள்ளது
அமெரிக்காவில் மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான ஹுவாய் நிர்வாகி மெங் வான்ஷோவை ஒப்படைக்கும் வழக்கில் நீதிபதி ஹீதர் ஹோம்சின் முடிவை சீனா கோபத்துடன் கண்டித்தது.
தனது இரு "தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள" கனேடிய ஆண்களை விடுவிக்க அழைப்பு விடுத்து, அரசியலில் இருந்து தனது நீதித்துறையின் சுதந்திரத்தை தொடர்ந்து மதிக்கப்போவதாகவும் கனடா கூறியது.
கனடா தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் என்று தெரிகிறது. பல ஆய்வாளர்கள் சீன-கனேடிய உறவுகளில் இந்த தீர்ப்பானது ஒரு நெருக்கடியை ஆழப்படுத்துவதாகக் கூறினர்.
இந்த தீர்ப்பானது கனடாவை இரண்டு புவிசார் அரசியல் சக்திகளுக்கு இடையிலான சண்டையின் நடுவில் நிறுத்தியுள்ளது.
இத்தீர்ப்பு குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ள ஹுவாய் நிறுவனம், "திருமதி மெங் நிரபராதி என்று நாங்கள் எப்போதும் நம்புவதாகவும், நியாயமான தீர்ப்பையும் சுதந்திரத்தையும் கோருவதில் நாங்கள் அவருக்குத் தொடர்ந்து ஆதரவளிப்போம்'' என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.