முழுமையான இராணுவ ஆட்சிக்கு செல்வது அல்லது ஜனநாயக ஆட்சிக்கு செல்வது ஆகிய இரண்டு மாற்று வழிகளே நாட்டில் எஞ்சியிருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
"எமக்கு இரண்டு தெரிவுகளே இருக்கின்றன. முழுமையான இராணுவ ஆட்சிக்கு செல்ல வேண்டும் அல்லது ஜனநாயக ஆட்சிக்கு செல்ல வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் ஜனநாயக நீரோட்டத்திற்கு செல்லும் நோக்கில் தேர்தலை நடத்த நாடாளுமன்றத்தை கலைத்துள்ளனர். எதிர்க்கட்சியில் உள்ள இரண்டு தரப்பினரும் எப்படியாவது தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றே முயற்சித்து வருகின்றனர்." என்று நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.