வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழரின் தாயகம் அல்ல. இதுவும் பௌத்த - சிங்களவர்களின் பூமிதான். ஒட்டுமொத்த இலங்கையும் பௌத்த - சிங்கள நாடு. என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
"வடக்கு, கிழக்கை நாம் பாதுகாக்க வேண்டுமெனில் இங்கு இராணுவத்தைத் தான் நிலைநிறுத்த வேண்டும். அவர்களின் நேரடிக் கண்காணிப்பில்தான் அனைத்துச் செயற்பாடுகளும் நடைபெறும்.
எனவே, தமிழர்கள் விரும்பினால் எமது கொள்கைகளை ஏற்று எம்முடன் இணைந்து பயணிக்கலாம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.