Home » உலகச் செய்திகள் » இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடம்- நேபாள பாராளுமன்றத்தில் விவாதம்

இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடம்- நேபாள பாராளுமன்றத்தில் விவாதம்

விவாதத்தின் நிறைவில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

👤 Sivasankaran13 Jun 2020 3:15 PM GMT
இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடம்- நேபாள பாராளுமன்றத்தில் விவாதம்
Share Post

இந்திய பகுதிகளான காலாபாணி, லிம்பியாதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் தங்களுக்கு சொந்த பகுதி என்று கூறி வந்த நேபாளம், அந்த பகுதிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அந்த பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்திருப்பதாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்து வருகிறார்.

திருத்தப்பட்ட வரைபடம் தொடர்பான சட்டத்திருத்த மசோதா மீது விவாதம் நடத்துவதற்காக பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதலில் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் முதலில் விவாதம் தொடங்கி காரசாரமாக நடைபெறுகிறது. விவாதத்தின் நிறைவில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.