போருக்கு தயாராகுங்கள் - சீன அதிபர் ஜின்பிங்
இரண்டாம் முறை அதிபாராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பின் உரை
👤 Mangaathaa30 Oct 2017 1:56 PM GMT

2-வது முறையாக, சீன அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங், போருக்கு தயாராகுங்கள் என்று சீன ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
2-வது முறையாக, சீன அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங், நேற்று முன்தினம் இரவு, உயர் ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் "கட்சிக்கு முற்றிலும் விசுவாசமாக இருங்கள் என்றும் போர்களில் எப்படி வெற்றி பெறுவது என்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் போருக்கான ஆயத்த நிலையை தீவிரப்படுத்துங்கள் என்றும் கூறினார். சீர்திருத்தங்களை, புதுமைகளை முன்னெடுத்து செல்லவும் இராணுவ வீர்ர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் ராணுவத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும், போருக்கான ஆயத்த பயிற்சியை தீவிரம் ஆக்க வேண்டும் என்றும் கூறிய அதிபர், எதிர்காலத்தில் ராணுவ அபிவிருத்திக்கான பிரச்சினைகளை கவனமாக கையாள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், "சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டில் எழுந்த உணர்வுகளை செயலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறிய அவர், ராணுவத்தை பலம் வாய்ந்ததாக கட்டமைப்பதில் கவனம் செலுத்துங்கள் என்று தெரிவித்தார். மேலும், ராணுவத்தை நவீனமயமாக்க வேண்டும் என்றும், 21-ம் நூற்றாண்டின் மத்தியில் உலகின் தரம்வாய்ந்த ராணுவமாக சீன ராணுவம் உருவாக வேண்டும்" என்றும்சீன அதிபர் ஜின்பிங் குறிப்பிட்டார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire