Home » உலகச் செய்திகள் » முகநூல் ஒரு போலியான உலகம்- மில்லியன் டாலர் வேலையை உதறித்தள்ளிய இளைஞரின் குமுறல்
முகநூல் ஒரு போலியான உலகம்- மில்லியன் டாலர் வேலையை உதறித்தள்ளிய இளைஞரின் குமுறல்
மார்க் நியமித்த நபர் முகநூல் ஒரு மாயை என்று புலம்பிக்கொண்டு வேலையை விட்டு ஓடிவிட்டார். தனிநபரான அவரது சம்பளமாக முகநூல் ஆண்டிற்கும் இந்திய ரூ மதிப்பில் 35 லட்சமாக கொடுத்துக்கொண்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
👤 Saravana Rajendran9 Feb 2018 9:43 AM GMT

முகநூல் பற்றியும் அதை உருவாக்கிய மார்க் பற்றியும் மக்கள் என்ன நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணங்களை நேர்மறையாக மாற்றும் திட்டம் என்ன என்பது பற்றி ஆய்வும் செய்ய தொழில் நுட்ப பணியாளர் ஒருவரை முகநூல் நிறுவனத்தை உருவாக்கிய மார்க் ஷுகர்பெர்க் நியமித்தார். ஆனால் அந்த நபர் முகநூல் ஒரு மாயை என்று புலம்பிக்கொண்டு வேலையை விட்டு ஓடிவிட்டார். தனிநபரான அவரது சம்பளமாக மார்க் ஆண்டிற்கும் இந்திய ரூ மதிப்பில் 25 லட்சமாக கொடுத்துக்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் முகநூல்(பேஸ்புக்) குறித்தும், அதை உருவாக்கிய என்னைப் பற்றியும் மக்கள் என்ன நிலைக்கிறார்கள் என்பதற்கு முகநூல் நிறுவனத்தலைவர் தொழில் நுட்ப வல்லுனர் ஒருவரை நியமிக்க முடிவு செய்தார். இவருக்கு ஊதியமாக ஆண்டிற்கு இந்திய ரூ மதிப்பில் 25 லட்சம் சம்பளமாக கொடுத்தார். இந்த வேலைக்கு டாவிஸ் என்பவரை தேர்தெடுத்து அமரவைத்தார். தனிநபர் பணியான இந்தப் பணியில் 2016 ஆம் ஆண்டிலிருந்து டாவிஸ் பணிபுரிந்து வந்தார். அவர் ஏற்கனவே கூகிள் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமாகையால் அவருக்கு அந்தப் பதவி கிடைத்தது.
இவர் வேலைக்குச் சேர்ந்த நேரம் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான காலகட்டம். அதிபர் தேர்தலின்போது அமெரிக்க வாக்காளர்களைக் குழப்பும் நோக்கில் ரஷ்யா நூற்றுக்கணக்கான போலி முகநூல் கணக்குகளைத் தொடங்கி சர்ச்சைக்குரிய செய்திகள், கட்டுரைகளை வெளியிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் முகநூல் நிறுவனம் கடுமையான சரிவை கண்டது. இதனால் முகநூல் நிறுவனம் மார்க்மீது மக்களின் அபிப்ராயம் மாறிவிட்டதாக அந்நிறுவனம் வருந்தியது. இதனால் மார்க்கெட்டிங் துறையில் வேலை கேட்டு வந்தடாவிஸுக்கு மார்க் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்யும் வேலையைக் கொடுத்தார்கள். பணியமர்த்தியது. தாவிஸும் வேலையை ஏற்றுக்கொண்டார். ஆனால், ஆறு மாதங்களில் வேலை பிடிக்காமல் முகநூல் நிறுவன வேலையைவிட்டு வெளியேறினார்.
இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த தாவிஸ் கூறியதாவது, 'எனக்கு முகநூல் நிறுவனத்தில் ஒரு வித்தியாசமான வேலை கொடுக்கப்பட்டது..உலகெங்கும் முகநூல்பயன்படுத்தும் மக்கள் மார்க் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று ஆய்வு செய்வதே என் வேலை. மார்க் எப்படிப்பட்டவர், அவர் ஊடகங்களுக்கு சரியான முறையில் பேட்டியளிக்கிறாரா. அவர் முகநூல் போஸ்ட் உங்களுக்குப் பிடிக்குமா போன்ற கேள்விகள் அந்தச் ஆய்வில் இடம்பெற்றிருக்கும். ஆய்வின் போது நான் ஒருசில விஷயங்களைப் புரிந்துகொண்டேன். மக்களுக்கு முகநூல் மீது அப்படியொன்றும் நல்ல அபிப்ராயம் இல்லை. முகநூல் நிறுவனம் வணிகம் செய்யும் முறையே எனக்குப் பிடிக்கவில்லை. முகநூல் ஒரு மாயை என்பதை உணர்ந்துவிட்டேன். என்னால் இதை மாற்ற முடியாது. முகநூல் நிறுவனம் பின்பற்றும் கலாசாரத்தையும் என்னால் மாற்ற முடியாது. அதனால் முகநூல் வேலையை உதறித்தள்ளினேன்' என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி முகநூல் நிறுவனம் இன்னும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire