பாகிஸ்தான் ஆட்சிமொழியாக சீனம்-செனட் ஒப்புதல்
பாகிஸ்தானின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக சீனாவின் மாண்டரின் மொழியை அங்கீகரிக்கும் தீர்மானத்திற்கு, அந்நாட்டு செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
👤 Saravana Rajendran20 Feb 2018 3:38 PM GMT

சீனாவில் 70 சதவீத மக்கள் பேசும் மொழியான மாண்டிரின், உலக அளவில் அதிகம் பேர் பேசும் மொழிகளிலும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தெற்காசிய பிராந்தியத்தில் பாகிஸ்தானின் உற்ற தோழனாக சீனா மாறியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக சீனா பாகிஸ்தானுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறது. துறைமுக பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை சீனா அங்கு மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக குறிப்பிடத்தக்க அளவிலான் சீனர்கள் அங்கு வசித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாகிஸ்தானின் 'டான்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 'பாகிஸ்தானியர்கள் சீன மொழியை கற்றுகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக மாறிவரும் சூழலில் அதிக வேலை வாய்ப்பை அது வழங்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக சீனா மற்றும் பாகிஸ்தானின் உறவு மேலும் வலுவடைந்து உள்ளது. இதன் தொடர்ச்சியாகவே பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக சீனாவின் மாண்டரின் மொழியை அங்கீகரிக்கும் தீர்மானத்திற்கு, அந்நாட்டு செனட் சபை ஒப்புவதால் வழங்கியுள்ளது.
அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளைப் பொறுத்த வரையில் இந்த நடவடிக்கை தேவை இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங் இடையில் உள்ள உறவினை மேலும் ஆழப்படுத்த, மாண்டரின் தெற்காசிய நாடு ஒன்றின் ஆட்சி மொழியாக இருத்தல் அவசியம். இதன் மூலம் சீனா பாகிஸ்தான் பொருளாதாரத்தில் எளிதாக இணைய முடியும்.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire