Home » உலகச் செய்திகள் » ஆஸ்திரேலியப் பாலூட்டிகள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன - ஆய்வாளர்கள்

ஆஸ்திரேலியப் பாலூட்டிகள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன - ஆய்வாளர்கள்

ஆஸ்திரேலிய கண்டத்தில் மட்டுமே வாழும் பாலூட்டி விலங்குகளில் ஒன்று கங்காரு. கங்காருவைப் போன்ற...

👤 Saravana Rajendran24 April 2018 4:07 PM GMT
ஆஸ்திரேலியப் பாலூட்டிகள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன - ஆய்வாளர்கள்
Share Post

ஆஸ்திரேலிய கண்டத்தில் மட்டுமே வாழும் பாலூட்டி விலங்குகளில் ஒன்று கங்காரு. கங்காருவைப் போன்ற ஆஸ்திரேலியாவின் மற்ற பாலூட்டிகளை எதிர்காலத்திலும் பூமியில் காண இயலாது, அவை அழிந்து விடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
10 ஆஸ்திரேலியப் பறவை இனங்களும் ஏழு பாலூட்டி இனங்களும் அடுத்த 20 ஆண்டுகளில் அழிந்துவிடு நிலை உருவாகியுள்ளது ஆனால், அவற்றைப் பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டால் இந்நிலை மாறலாம் என்று இன்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவில் உள்ள விலங்குகள் அழிந்துபோகும் விகிதம் உலகத்திலேயே ஆக உயர்ந்தது. இதுவரை, 34 பாலூட்டி இனங்களும் 29 பறவை இனங்களும் அழிந்துள்ளன என்ற தகவலையும் ஆய்வாளர்கள் பகிர்ந்துகொண்டனர்.