இரட்டைக் குழந்தைகளான பை யுவான் சின், பெய் யுவான் டொங் ஆகிய இருவரும் அம்மாவோடு கடற்கரைக்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
கடற்கரையில் அவர்கள் இருவரும் மணலில் விளையாடிக்கொண்டிருந்தனர். அவரது அன்னையோ அலைபேசியில் சமூக ஊடகத்தில் மூழ்கி இருந்ததார். இந்த நிலையில் சிறுமிகள் இருவரும் கடலில் சென்று விளையாட ஆரம்பித்தனர், அதில் பெரிய அலைவந்து இரு சிறுமிகளையும் இழுத்துச்சென்றது.
குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில் கடற்கரையில் இரண்டு சிறுமிகளின் உடலையும் பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.
சிறுமிகள் கடலில் மூழ்கி இறந்த நிகழ்வு குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.