மனித இனம் நவீனம் என்ற பெயரில் தொடர்ந்து இயற்கைக்கு எதிரான செயல்களில் இறங்கிவருவதால், பெருங்கடலைப் பாதுகாக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. பெருங்கடலைப் பாதுகாப்பது நமது கடமை ஆகும். எதிர்கால சந்ததியினருக்கு தூய்மையான பூமியை நாம் கொடுக்கவேண்டுமானால் பெருங்கடலைப் பாதுகாக்கவேண்டும்.
மேலும், தூய்மையான குடிநீர் வசதி கிடைப்பது அனைவரின் அடிப்படையான உரிமை என்றும் அவர் குறிப்பிட்டார். வசதி இல்லாதவர்களுக்கும் வறுமையில் வாடுபவர்களுக்கும் தூய்மையான குடிநீர் வசதி கிடைப்பதை உறுதிசெய்யும் கடமை உலகத்துக்கு உண்டு என்றார் அவர்