புத்தாண்டை கொண்டாடும் விதமாக பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த சில அந்நாடில் உள்ள முக்கியமான கேளிக்கை பூங்கா ஒன்றிற்கு சென்று அனைவருடனும் புத்தாண்டை கொண்டாட முடிவு செய்தனர். இடைப்பட்ட நேரத்தில் அங்கிருந்து 52 அடி உயரம் கொண்ட ராட்டினம் ஒன்றிற்கு விளையாட முடிவு செய்தனர். பூம்பர் மாக்ஸ் என்ற அந்த ராட்டினத்தில் 8 பேர் ஒன்றாக ஏறி விளையாட ஆரம்பித்தனர். சில நிமிடம் உயரமாக கொண்டுசென்று மீண்டும் தரைக்கு கொண்டுவரும் இந்த ராட்டினம் திடீரென தொழில் நுட்பகோளாறு காரணமாக உயரத்திலேயே நின்று விட்டது, இதனை அடுத்து தீயனைப்பு படை வீரர்கள் வந்து தங்களிடம் உள்ள ராட்சத ஏணி மூலம் அவர்களை மீட்க முயன்றனர் ஆனால் அது இயலாமல் போனது, இதனை அடுத்து எலிகாப்டர் வரவழைக்கப்பட்டு அவர்களை மீண்டனர். சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்த மீட்புப் பணியின் காரணமாக கேளிக்கை பூங்காவே பரபரப்பாக இருந்தது,
இன்று அதிகாலை 6 மணிக்கு அவர்கள் எலிகாப்டர் மூலம் காப்பாற்றப்பட்டனர். இது தொடர்பாக விபத்தில் மீண்ட ஒருவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்த புத்தாண்டோடு எங்களுக்கு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து நாங்கள் பிராத்தனை செய்துகொண்டோம், உயரத்தில் இருந்த போது வெடிச்சத்தம் கேட்டது, அது புத்தாண்டை வரவேற்கும் வெடிச்சத்தம் இருப்பினும் எங்களுக்கு அது ஒரு மரண அச்சமூட்டும் சத்தமாக அமைந்தது,
இருப்பினும் நாங்கள் காப்பாற்றபப்ட்டோம், இதைநினைத்தால் எங்களுக்கு இப்போதும் அச்சமாக உள்ளது, உண்மையில் இது போன்ற ஒரு அச்சமான புத்தாண்டு யாருக்கும் பிறந்திருக்காது என்று நினைக்கிறேன் என கூறினார்.
இந்த நிலையில் ராட்டினத்தில் தொழில் நுட்பகோளாறு ஏற்பட்டது தொடர்பாக நகர நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, இனிமேலும் இது போன்ற அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்ள அதிதீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.