முன்னாள் சபாநாயகர் ஜீன் வோஸ்ஸெடிஸ்கி காலமானார்
அல்பர்ட்டா சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகரர் ஜீன் வோஸ்ஸெடிஸ்கி தனது 71 ஆவது வயதில் காலமானர்.
👤 Sivasankaran7 Jan 2019 11:25 AM GMT

கனடா - அல்பர்ட்டா சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகரர் ஜீன் வோஸ்ஸெடிஸ்கி தனது 71 ஆவது வயதில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காலமானார். இவர் புற்றுநோய்த் தாக்கத்தினால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
அவரது மறைவிற்கு அவரது கட்சி உறுப்பினர்களும் அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அல்பர்ட்டா லிபரல் கட்சியின் உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை 1993–1998 தொடங்கிய அவர், 1997 ஆம் ஆண்டு பொது தேர்தலில் எட்மட்டன்-மில் கிரீக் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் தொடர்ந்து 2001, 2004, 2008, 2012 இல் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.
கடந்த 2012 முதல் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அல்பர்ட்டா சட்டமன்றத்தின் 12 ஆவது சபாநாயகராக செயற்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire