Home » உலகச் செய்திகள் » சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தில் கூடுதல் நன்மைகள்

சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தில் கூடுதல் நன்மைகள்

இலங்கையில் சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தை 2019ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை...

👤 Sivasankaran9 Jan 2019 2:36 PM GMT
சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தில் கூடுதல் நன்மைகள்
Share Post

இலங்கையில் சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தை 2019ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

கடந்த வருட அனுபவங்களை கருத்திற்கொண்டு மாணவர்களுக்கு கூடுதலான பயன் கிடைக்கும் வகையில் புதிய யோசனைகளை உள்ளடக்குவதற்கு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமின் வழிகாட்டலின் கீழ் கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இந்த வருடத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் இரண்டு லட்சம் ரூபாவும் அரச வைத்தியசாலையில் அல்லது அரச ஆயுர்வேத வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் பட்சத்தில் நாளாந்தம் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் வெளிவாரியான சிகிச்சைகளின்போது 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் வழங்கப்படும்.

பெற்றோர் அல்லது பாதுகாவலர் மரணிக்கும் பட்சத்தில் ஒருவருக்கு இரண்டு லட்சம் ரூபாவும் மாணவர் உயிரிழக்கும் பட்சத்தில் ஈமக்கிரியைகளுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் முழுமையாக அல்லது நீண்டகால இயலாமைக்கு உட்படும்போது வருடாந்தம் 50 ஆயிரம் ரூபா முதல் 2 லட்சம் ரூபா வரையும் பெற்றுக்கொள்ள முடியும்.

கொடிய நோய் ஏற்படும் பட்சத்தில் இரண்டு லட்சம் ரூபா பயனைப் பெற்றுக்கொள்ள முடியும். இது இந்த ஆண்டில் கூடுதலாக நடைமுறைக்கு வந்துள்ள பயன்களாகும்.