Home » உலகச் செய்திகள் » பிரெக்ஸிற்றுக்கு பின்னரும் பிரித்தானியர்கள் நெதர்லாந்தில் தங்குவதற்கு அனுமதி

பிரெக்ஸிற்றுக்கு பின்னரும் பிரித்தானியர்கள் நெதர்லாந்தில் தங்குவதற்கு அனுமதி

நெதர்லாந்தில் ஏற்கனவே வசிக்கும் வதிவிட அனுமதி கொண்டுள்ள பிரித்தானியர்கள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றின் பின்னரும் தொடர்ந்தும் நெதர்லாந்தில் வசிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்களென அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.

👤 Sivasankaran9 Jan 2019 2:44 PM GMT
பிரெக்ஸிற்றுக்கு பின்னரும் பிரித்தானியர்கள் நெதர்லாந்தில் தங்குவதற்கு அனுமதி
Share Post

நெதர்லாந்தில் ஏற்கனவே வசிக்கும் வதிவிட அனுமதி கொண்டுள்ள பிரித்தானியர்கள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றின் பின்னரும் தொடர்ந்தும் நெதர்லாந்தில் வசிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்களென அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.

மார்ச் 29 ஆம் திகதி ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறும் நிலை ஏற்பட்டாலும் நெதர்லாந்தில் வாழ்வதற்குரிய அனுமதி பெற்றுள்ள பிரித்தானியர்கள் தொடர்ந்தும் தமது நாட்டில் வாழ்வதற்கும், கல்வி கற்பதற்கும், வேலை பார்ப்பதற்கும் அனுமதிக்கப்படுவார்களென நெதர்லாந்தின் நீதித்துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நெதர்லாந்தில் வாழும் கிட்டத்தட்ட 45000 பிரித்தானியர்களுக்கு டச்சு அரசின் இவ்வறிக்கை மிகப்பெரிய உதவியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நெதர்லாந்தில் வாழும் பிரித்தானியர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவி கொடுப்பனவுகளிலும் எவ்வித மாற்றங்களும் இருக்காது எனவும் டச்சு அரசு உறுதியளித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தமில்லாமல் பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் பிரித்தானியர்களின்உரிமைகளை பாதுகாக்குமாறு தனது உறுப்பு நாடுகளிடம் ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மாதம் கோரிக்கை விடுத்திருந்தது.

இத்தாலி மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளும் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றின் பின்னர் தமது நாடுகளில் வாழும் பிரித்தானியர்களுக்கு இதே சலுகைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் வாழும் 160000 பிரித்தானியர்களின் குடியுரிமை, வேலைவாய்ப்பு, நலன்புரி உரிமைகள் ஆகியவற்றுக்கு உடன்பாடற்ற பிரெக்ஸிற்றின் பின்னரும் உத்தரவாதம் அளிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ள பிரெஞ்சு அரசு, பிரித்தானியாவில் வாழும் பிரெஞ்சு குடிமக்களுக்கு பரஸ்பர சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.