Home » உலகச் செய்திகள் » பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ரெஜினாவிற்கு விஜயம்

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ரெஜினாவிற்கு விஜயம்

ரெஜினா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ...

👤 Sivasankaran9 Jan 2019 3:02 PM GMT
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ரெஜினாவிற்கு விஜயம்
Share Post

ரெஜினா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ரெஜினாவிற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

பிரதமர் நாளை (வியாழக்கிழமை) இரவு ரெஜினா பல்கலைக்கழகத்தின் நிகழ்வில் கலந்துக் கொள்வார் என லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் ரால்ப் குட்லெல் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இந்த விஜயம் தொடர்பாக ரெஜினா-வஸ்கானா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், "பிரதமர் இந்த விஜயத்தின்போது வேலைஉருவாக்கம், நடுத்தரவர்க்கம் மற்றும் பொருளாதாரத்தில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களிடம் கேட்டறிவார்" என தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பலநகராட்சி மன்றங்களை நிறுவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.