ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பனிபொழிவால் போக்குவரத்து ஸ்தம்பித்தது
ஐரோப்பிய நாடுகளில் தொடரும் கடுமையான பனிப்பொழிவால் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுப்போக்குவரத்துச் சேவைகளும் ஸ்தம்பிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் தொடரும் கடுமையான பனிப்பொழிவால் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுப்போக்குவரத்துச் சேவைகளும் ஸ்தம்பிக்கப்பட்டுள்ளன.
ஜெர்மனி மற்றும் ஒஸ்ரியா போன்ற நாடுகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்புயல் வீசி வருகின்றது. இதனால் வீதிகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் பல அடி உயரத்திற்கு பனி படிந்துள்ளதால் போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மியூனிச் நகரில் கடும் உறைபனியில் சிக்கிக்கொண்ட ரயில் 40 நிமிடங்களுக்கு மேலான போராட்டத்திற்குப் பின் இயக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் பனிக்கட்டிகள் அகற்றப்பட்டு வருவதால் வாகனங்களை மெதுவாக இயக்குமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நகர்ந்து, மெதுவாக செல்கின்றன.
ஐரோப்பிய நாடுகளில் உறைபனியின் தாக்கம் எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.