வடக்கு யோர்க் பகுதியில் உள்ள வீடொன்றில் தீ விபத்து
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
👤 Sivasankaran10 Jan 2019 4:04 PM GMT

கனடா, வடக்கு யோர்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வீட்டில் இருந்த இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கானசர் டிரைவ், ஸ்டீல்ஸ் மற்றும் பேவ்வியூ பகுதியியில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 1:30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
மீட்புப்பணியாளர்கள் அங்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் குறித்த தீ விபத்தானது குப்பை தொட்டியில் இருந்தே உருவாக்கியது என்றும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire