Home » உலகச் செய்திகள் » அடுக்குமாடிக் குடியிருப்பின் வீடொன்றில் இரண்டு சடலங்கள் கண்டெடுப்பு

அடுக்குமாடிக் குடியிருப்பின் வீடொன்றில் இரண்டு சடலங்கள் கண்டெடுப்பு

ரொறன்ரோவின் ஸ்கார்பாரோ சந்திப் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பின் வீடொன்றில் இருந்து இருவர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

👤 Sivasankaran10 Jan 2019 4:10 PM GMT
அடுக்குமாடிக் குடியிருப்பின் வீடொன்றில் இரண்டு சடலங்கள் கண்டெடுப்பு
Share Post

ரொறன்ரோவின் ஸ்கார்பாரோ சந்திப் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பின் வீடொன்றில் இருந்து இருவர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு செயிண்ட் கிளேர் அவென்யூற்கு தெற்கே, 544 பேர்ச்மவுண்ட் வீதியில் அமைந்துள்ள குறித்த அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் எட்டாவது மாடியில் இருந்து நேற்று பிற்பகல் 2.30 அளவில் அந்த சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் ஒன்று 40 வயதுடைய ஆணினதும், மற்றையது 30 வயதுடைய பெண்ணினதும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முதலில் ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதை பொலிஸார் கண்டுள்ளதைத் தொடர்ந்தே அங்குள்ள வீடு ஒன்றினுள் பெண் ஒருவரும் சடலமாக கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குறித்த அந்த இருவரும் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை. இருவரது உடல்களிலும் தாக்குதல்களுக்கு உள்ளானமைக்கான அடையாளங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

பொலிஸார் விசாரணைகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.