Home » உலகச் செய்திகள் » அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து இந்திய வம்சாவளி பெண் போட்டி

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து இந்திய வம்சாவளி பெண் போட்டி

ஜனநாயக கட்சியை சேர்ந்த துல்சி கபார்ட், 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில்...

👤 Sivasankaran12 Jan 2019 6:23 PM GMT
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து இந்திய வம்சாவளி பெண் போட்டி
Share Post

ஜனநாயக கட்சியை சேர்ந்த துல்சி கபார்ட், 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து நான்காவது முறையாக ஹவாய் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை (செனட்) உறுப்பினராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட துல்சி கபார்ட், அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அந்த நாட்டின் முதல் பெண் அதிபர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த அதிபர் என்ற சிறப்பிடத்தை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு திரட்டும் இயக்கத்தை தொடங்கிய துல்சி கபார்ட், 'நமது நாட்டுக்காகவும் நமக்காகவும் நாம் ஒன்றிணைந்து நின்றால் நம்மால் வெல்ல முடியாத சவால் என்று ஏதுமில்லை. நீங்கள் என்னோடு இணைவீர்களா?' என்று குறிப்பிட்டுள்ளார்.