Home » உலகச் செய்திகள் » நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து விபத்து

நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து விபத்து

நைஜீரியா நாட்டின் தென்பகுதியில் உள்ள கிராஸ் ரிவர் மாநிலத்தின் கலாபர்-ஓடும்பானி நெடுஞ்சாலை வழியாக...

👤 Sivasankaran12 Jan 2019 6:37 PM GMT
நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து விபத்து
Share Post

நைஜீரியா நாட்டின் தென்பகுதியில் உள்ள கிராஸ் ரிவர் மாநிலத்தின் கலாபர்-ஓடும்பானி நெடுஞ்சாலை வழியாக பெட்ரோல் ஏற்றிய டேங்கர் லாரி நேற்று சென்று கொண்டிருந்தது.

வேகமாக சென்ற லாரி ஒரு குறுகிய வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகிச்சென்று பக்கவாட்டில் கவிழ்ந்தது.

கவிழ்ந்த லாரியில் இருந்து பெட்ரோல் வழிந்தோடுவதை கண்ட அப்பகுதி மக்கள் பாத்திரங்களுடன் ஓடிசென்று பெட்ரோலை சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த லாரி திடீரென்று தீப்பிழம்பாக வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் 20-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.