Home » உலகச் செய்திகள் » கனடாவின் சில பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை

கனடாவின் சில பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை

கனடாவின் லண்டன் பகுதியில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என சுற்றுசூழல் கனடா அமைப்பு...

👤 Sivasankaran12 Jan 2019 6:56 PM GMT
கனடாவின் சில பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை
Share Post

கனடாவின் லண்டன் பகுதியில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என சுற்றுசூழல் கனடா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறித்த காலநிலை காரணமாக லண்டனிலுள்ள வீதிகள் மிகவும் அபாயகரமாக இருக்கும் என வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல பகுதிகளில் கடுமையான காற்று வீசுமென எதிர்வு கூறப்பட்டுள்ளதோடு, புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.