Home » உலகச் செய்திகள் » வெஸ்ட்போரோ பகுதியில் பேருந்து விபத்து

வெஸ்ட்போரோ பகுதியில் பேருந்து விபத்து

ஒட்டாவா பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று வெஸ்ட்போரோ பகுதியில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சுரங்க நடைபாதையின் மேற்கூரையின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியது.

👤 Sivasankaran13 Jan 2019 2:15 PM GMT
வெஸ்ட்போரோ பகுதியில் பேருந்து விபத்து
Share Post

கனடா, ஒட்டாவா பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று வெஸ்ட்போரோ பகுதியில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சுரங்க நடைபாதையின் மேற்கூரையின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியது.

நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த 23 பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.