Home » உலகச் செய்திகள் » ஸ்கார்பரோ பகுதியில் கத்திக்குத்து சம்பவம்

ஸ்கார்பரோ பகுதியில் கத்திக்குத்து சம்பவம்

ஸ்கார்பரோ பகுதியில், அப்டன் வீதி மற்றும் வோர்டன் அவனியூ பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு 8:30 மணியளவில் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

👤 Sivasankaran15 Jan 2019 4:59 PM GMT
Share Post

ஸ்கார்பரோ பகுதியில், அப்டன் வீதி மற்றும் வோர்டன் அவனியூ பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு 8:30 மணியளவில் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அறிந்து அங்கு சென்ற பொலிஸார், பாதிக்கப்டட நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காயமடைந்தவர் 41 வயதுடையவர் என்றும், அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.