Home » உலகச் செய்திகள் » சாலை விபத்தில் இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

சாலை விபத்தில் இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

பிரிட்டன் ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) ஓட்டிச்சென்ற கார் திடீரென்று விபத்தில் சிக்கியது.

👤 Sivasankaran18 Jan 2019 2:11 PM GMT
சாலை விபத்தில் இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
Share Post

பிரிட்டன் ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) ஓட்டிச்சென்ற கார் திடீரென்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக காயமின்றி இளவரசர் பிலிப் தப்பினார்.

இளவரசர் பிலிப் தனது காரை பிரதான சாலைக்கு எடுத்து வரும் போது, அவ்வழியாக வந்த மற்றொரு கார் மோதியதாக தெரிகிறது. கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டிங்கம் எஸ்டேட் அருகே இந்த விபத்து நடந்தது.

விபத்து நடைபெற்றதை பக்கிங்ஹாம் அரண்மனையும் உறுதி செய்துள்ளது. இளவரசருக்கு இந்த விபத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்ட மற்றொரு காரில் இருந்த இருவர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினர். லேண்ட்ரோவர் கார் சாலையின் ஓரத்தில் ஒருபக்கமாக கவிழ்ந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.