Home » உலகச் செய்திகள் » கொலம்பியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்

கொலம்பியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்

மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவின் தலைநகரம் போகோடா. இங்குள்ள போலீஸ் அகாடமி அருகே கார் வெடிகுண்டு...

👤 Sivasankaran19 Jan 2019 2:50 AM GMT
கொலம்பியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்
Share Post

மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவின் தலைநகரம் போகோடா. இங்குள்ள போலீஸ் அகாடமி அருகே கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.நா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

'ஏற்றுக்கொள்ள முடியாத குற்றவியல் சம்பவம் நடந்துள்ளது. வன்முறையில் இருந்து விலகி, வளமான மற்றும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிரான தாக்குதல். இதுபோன்ற தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம்' என ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.