Home » உலகச் செய்திகள் » ரொறன்ரோ மக்களுக்கு சுற்றுச்சூழல் திணைக்களத்தின் எச்சரிக்கை

ரொறன்ரோ மக்களுக்கு சுற்றுச்சூழல் திணைக்களத்தின் எச்சரிக்கை

ரொறன்ரோவில் இவ்வார இறுதியில் கடும் குளிரான காலநிலை காணப்படும் என கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

👤 Sivasankaran19 Jan 2019 2:20 PM GMT
ரொறன்ரோ மக்களுக்கு சுற்றுச்சூழல் திணைக்களத்தின் எச்சரிக்கை
Share Post

ரொறன்ரோவில் இவ்வார இறுதியில் கடும் குளிரான காலநிலை காணப்படும் என கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, தேவையற்ற வெளிப்பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை பகல் வேளைகளில் 2 பாகை செல்சியசாக காணப்படும் வெப்பநிலை, இரவு நேரங்களில் -13 செல்சியசாகக் குறைந்து காணப்படும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை மேலும் மோசமடைந்து -21 செல்சியசாகக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுமார் 20 கிலோமீட்டர் வேகத்தில் -22 செல்சியசில் குளிர் காற்று வீசும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.