Home » உலகச் செய்திகள் » ஆழ்கிணற்றில் சிக்கிக் கொண்ட ஸ்பெயின் சிறுவனை மீட்கும் பணிகள் தீவீரம்

ஆழ்கிணற்றில் சிக்கிக் கொண்ட ஸ்பெயின் சிறுவனை மீட்கும் பணிகள் தீவீரம்

தெற்கு ஸ்பெயினில் கடந்த வாரம் ஆழ் கிணற்றில் தவறி வீழ்ந்த 2 வயதான சிறுவனை மீட்கும் பணிகள் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது வாரமாக நடந்து வருகின்றது.

👤 Sivasankaran20 Jan 2019 3:08 PM GMT
ஆழ்கிணற்றில் சிக்கிக் கொண்ட ஸ்பெயின் சிறுவனை மீட்கும் பணிகள் தீவீரம்
Share Post

தெற்கு ஸ்பெயினில் கடந்த வாரம் ஆழ் கிணற்றில் தவறி வீழ்ந்த 2 வயதான சிறுவனை மீட்கும் பணிகள் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது வாரமாக நடந்து வருகின்றது. சிறுவனை மீட்பதற்காக கிணற்றை அகலமாக்கும் பணிகள் நேற்று மாலை தொடக்கம் மேற்கொள்ளப்பட்டன. ஆழமான கிணற்றில் வீழ்ந்த சிறுவனை நெருங்கி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் கட்டமாக 60 மீட்டர் ஆழம் வரை கிணற்றை செங்குத்தாக பெரிதாக்குவதற்கு முயற்சிக்கப்பட்ட நிலையில், கடந்த 15 மணித்தியாலங்களில் 33 மீட்டர்கள் மாத்திரமே அகலமாக்கப்பட்டது.

முதல் சுரங்கப்பாதை முடிவடைந்தவுடன், மீட்புப் பணியாளர்கள் சிறுவன் சிக்கியுள்ள பகுதியை அடைய இரண்டாவது குறுகிய குடைவாயை அமைக்க முயற்சித்து வருகின்றனர். அந்த பணி நாளை வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குழந்தையை காப்பாற்றும் நோக்கத்திற்கு பொதுமக்களின் ஆதரவு வெளிப்படையாக கிடைத்து வருகின்ற போதும் கனரக உபகரணங்களை செங்குத்தான பாதைகளில் கொண்டு செல்வது என்பது மிகவும் கடினமாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.