Home » உலகச் செய்திகள் » நேதன் பிலிப் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம்

நேதன் பிலிப் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்குமாறு கோரி நேதன் பிலிப் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran21 Jan 2019 5:50 PM GMT
Share Post

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்குமாறு கோரி நேதன் பிலிப் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு வொஷிங்டனில் நடைபெற்ற இந்தப் பேரணியின் மூன்றாவது ஆண்டு ஊர்வலமாகவே ரொறண்ரோவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இடம்பெற்ற குறித்த பேரணி குயீன்ஸ் பார்க்கில் நிறைவு பெற்றது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்காக குரல் கொடுக்கும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கு பெற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.