Home » உலகச் செய்திகள் » நாடாளுமன்றில் வெளிப்படையாக செயற்பட தயார் என்றார் பிரதமர் மே

நாடாளுமன்றில் வெளிப்படையாக செயற்பட தயார் என்றார் பிரதமர் மே

ஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவு குறித்த பேச்சுவார்த்தையில் நாடாளுமன்றில் மிகவும் வெளிப்படையாக செயற்படவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ளார்.

👤 Sivasankaran22 Jan 2019 5:10 PM GMT
நாடாளுமன்றில் வெளிப்படையாக செயற்பட தயார் என்றார் பிரதமர் மே
Share Post

ஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவு குறித்த பேச்சுவார்த்தையில் நாடாளுமன்றில் மிகவும் வெளிப்படையாக செயற்படவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், "கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பின் மூலம் அரசாங்கத்தின் அணுகுமுறை மாற்றப்பட வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்பாடின்றி விலகுவதற்கான சாத்தியம் குறித்து பரவலான கவலை எழுந்துள்ளது. அதன்படி உடன்பாடற்ற பிரெக்ஸிற் நடைமுறையை அரசாங்கம் கைவிட வேண்டும் என நாடாளுமன்றிலுள்ள இரு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை நிறுத்துவதாயின், ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய உடன்படிக்கையை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும். இதனை அடைவதற்கே அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

மக்கள் மத்தியில் இரண்டாவது வாக்கெடுப்பை நடத்துவது என்பதில் விருப்பமில்லை என்பதை நான் பலமுறை தெரிவித்திருக்கிறேன். முதலாவது வாக்கெடுப்பில் பெற்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதே எமது கடமை" எனத் தெரிவித்தார்.