Home » உலகச் செய்திகள் » கடும் பனிபொழிவால் பாடசாலை பேருந்து சேவைகள் நிறுத்தம்

கடும் பனிபொழிவால் பாடசாலை பேருந்து சேவைகள் நிறுத்தம்

கனடாவில் கடும் பனிபொழிவு நிலவிவரும் நிலையில் சில முக்கிய பகுதிகளில் பாடசாலைப் பேருந்து சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran22 Jan 2019 5:29 PM GMT
கடும் பனிபொழிவால் பாடசாலை பேருந்து சேவைகள் நிறுத்தம்
Share Post

கனடாவில் கடும் பனிபொழிவு நிலவிவரும் நிலையில் சில முக்கிய பகுதிகளில் பாடசாலைப் பேருந்து சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசிவருகின்ற நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை அங்கு வெப்பநிலை -14°C ஆக பதிவாகியுள்ளது.

வீதிகளை பனிக்கட்டிகள் மூடியுள்ளமை காரணமாக அங்கு போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஒட்டாவா – Gatineau ஊடான பாடசாலைப் பேருந்து சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதற்கு கடும் சிரமத்திற்குள்ளவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.