Home » உலகச் செய்திகள் » செட்ரூவிக் பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

செட்ரூவிக் பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கனடாவின் செட்ரூவிக் பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) டிரக் வண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதிக்கொண்டதால் இந்த விபத்து நடந்துள்ளது.

👤 Sivasankaran22 Jan 2019 5:42 PM GMT
செட்ரூவிக் பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
Share Post

கனடாவின் செட்ரூவிக் பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) டிரக் வண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதிக்கொண்டதால் இந்த விபத்து நடந்துள்ளது.

காரில் பயணித்த 72 வயதான வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பனிபொழிவினால் வீதி வழுவழுப்பாக காணப்பட்டதாகவும், இதன்காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.