Home » உலகச் செய்திகள் » தென்கொரியா போர்க் கப்பலை வட்டமிட்ட ஜப்பான் விமானம்

தென்கொரியா போர்க் கப்பலை வட்டமிட்ட ஜப்பான் விமானம்

தென்கொரியா நாட்டின் கடல் பகுதிக்கு மேலாக பறக்கும் அனுமதி பெறாத விமானங்கள் கண்டுபிடித்து சுட்டு வீழ்த்தும் வகையில் அதி நவீன ரேடார்களை அமைக்க தென்கொரியா தீர்மானித்தது.

👤 Sivasankaran23 Jan 2019 5:21 PM GMT
தென்கொரியா போர்க் கப்பலை வட்டமிட்ட ஜப்பான் விமானம்
Share Post

தென்கொரியா நாட்டின் கடல் பகுதிக்கு மேலாக பறக்கும் அனுமதி பெறாத விமானங்கள் கண்டுபிடித்து சுட்டு வீழ்த்தும் வகையில் அதி நவீன ரேடார்களை அமைக்க தென்கொரியா தீர்மானித்தது. இந்த முடிவுக்கு ஜப்பான் அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால், இருநாடுகளுக்கும் இடையில் சில முக்கிய பேச்சுவார்த்தைகளை ஜப்பான் நிறுத்தி விட்டது.

இந்நிலையில், ஜப்பான் நாட்டு கடற்படையை சேர்ந்த ஒரு விமானம் தங்கள் நாட்டின் போர்க் கப்பலை குறிவைத்து வட்டமிட்டதாக இன்று குறிப்பிட்ட தென்கொரியா அரசு, ஜப்பானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜப்பான் அரசு எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்து வருகிறது.